PBT

எம்பிஏஜே மீது மாநில அரசாங்கத்தின் நம்பிக்கையை கண்டு பெருமிதம்

2 ஜூலை 2017, 7:11 AM
எம்பிஏஜே மீது மாநில அரசாங்கத்தின் நம்பிக்கையை கண்டு பெருமிதம்
எம்பிஏஜே மீது மாநில அரசாங்கத்தின் நம்பிக்கையை கண்டு பெருமிதம்

அம்பாங், ஜூலை 3:

அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஏஜே) மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தது நகராண்மை கழகத்தின் சிறந்த நிர்வாகத்திற்கு அங்கீகாரமாக கருதுகிறோம் என்று எம்பிஏஜேவின் தலைவர் அப்துல் ஹமீத் ஹூசேன் கூறினார். இந்த வாய்ப்புக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு நன்றி கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சி எதிர் பார்க்கப்பட்டது போல நல்ல வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

"  எம்பிஏஜேவை தேர்ந்தெடுத்த   சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு எங்களின் நன்றி. நகராண்மை கழகத்தின் 25-ஆம் நினைவு நாள், இந்த நிகழ்ச்சியில் மூலம் மேலும் சிறப்பு அடைகிறது," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Raya1

 

 

 

 

 

கடந்த ஆண்டில் எம்பிஏஜே A2 கெராமாட் திடலில் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பண்டான் இண்டா எம்பிஏஜே திடலில் சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் 50,000 பொது மக்கள் காலை 8 மணியில் இருந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் அரசர், மேன்மை தங்கிய சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் அவர்தம் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோர்ஹாசிகீன் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அரசத் தம்பதியருடன், மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்களும் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு வருகை புரிந்து மக்களோடு இணைந்து கொண்டாடினர்.

#கேஜிஎஸ்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.