PBT

எம்பிபிஜே ஆதரவற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பும் நன்கொடையும் வழங்கினார்கள்

11 ஜூன் 2017, 2:19 AM
எம்பிபிஜே ஆதரவற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பும் நன்கொடையும் வழங்கினார்கள்

பெட்டாலிங் ஜெயா - வசதி குறைந்தவர்கள் மற்றும் பரிவு மிக்க வர்க்கத்தின் மீதிலான அன்பார்ந்த பார்வையை பெட்டாலிங் ஜெயா மாந்கார மன்றம் ஒரு போதும் மறந்ததில்லை.அவ்வகையில் அத்தகைய வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு  அம்மாநகர மன்றம் நிதியுதவியும் பள்ளிக்கூட  பொருட்களையும் தொடர்ந்து அன்பளிப்பு செய்து வருகிறது.

அத்தகைய அன்பளிப்பும் நன்கொடையும் இங்குள்ள ஆதரவற்ற இல்லங்களை சார்ந்த மாணவர்களுக்கு எம்பிபிஜே ஊழியர்களால் வழங்கப்பட்டது.ஒவ்வொரு மாணவருக்கு தலா வெ.150 மற்றும் பள்ளிக்கூட புத்தகப் பையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அன்பளிப்பும் நன்கொடையும்  எம்பிபிஜேவின் டத்தோ பண்டார் டத்தோ முகமட் அஜிசி முகமட் ஷைன் எடுத்து வழங்கினார்.

ஆதரவற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பும் நன்கொடையும் வழங்கியதோடு மட்டுமின்றி எம்பிபிஜே அம்மாணவர்களோடு நோன்பு திறப்பு நிகழ்விலும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.