கிள்ளான் 3-ஆம் ஆண்டு நிறைவு விழா: நவ.26–29 வரை குடும்பங்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்

24 நவம்பர் 2026, 6:25 AM
கிள்ளான் 3-ஆம் ஆண்டு நிறைவு விழா: நவ.26–29 வரை குடும்பங்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்

ஷா ஆலாம், நவ.24 – கிள்ளான் அரச நகரின் 3-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் நவம்பர் 26 முதல் 29-ஆம் தேதி வரை பண்டமாரான் வளாகத்தில் நான்கு நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Havoc Fest 100.0 நிகழ்ச்சியுடன் இணைந்து நடைபெறும் இவ்விழாவில் உணவுத் திருவிழா, பாரம்பரிய விளையாட்டுகள், பல்வேறு போட்டிகள், இசைக் கச்சேரிகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

குறிப்பாக, நவம்பர் 28-ஆம் தேதி கிள்ளான் மாவட்டத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் காணொளிப் போட்டி, சமையல் போட்டி, தாயம், கல் விளையாட்டு, தெங்-தெங் மற்றும் பாதேக் வரையும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

மேலும், நவம்பர் 29-ஆம் தேதி சிறுவர்களுக்காக வண்ணம் தீட்டும் போட்டி, தனித்திறன் வெளிப்பாட்டுப் போட்டி மற்றும் வேடமணியும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இசை நிகழ்ச்சிகளில் அஸ்ஃபஹான் ஷா, Manusia இசைக்குழு, ஹஸ்னோல் மற்றும் Tonedeff உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். அதேவேளையில், Fad Bocey, Sharif Zero மற்றும் Danial Zain ஆகியோர் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது.

விழாவின் நிறைவு நிகழ்ச்சி நவம்பர் 29-ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (MBDK) மேயர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் ஹுசேன் தலைமையில் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ள ‘Konsert Malam Yang Satu’ இசைக் கச்சேரியில் Yabang Khalifah, Nizam Laksamana, Renggo Arrow, Yantzen மற்றும் டத்தோ நாஷ் உள்ளிட்ட பிரபலப் பாடகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.