வெள்ள அபாயப் பகுதிகளில் வடிகால் பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் MBPJ

15 நவம்பர் 2026, 7:35 AM
வெள்ள அபாயப் பகுதிகளில் வடிகால் பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் MBPJ

ஷா ஆலாம், நவ.15 – கனமழைக் காலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBPJ) வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் சாலை தூய்மைப்படுத்துதல் மற்றும் வடிகால் பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நவம்பர் 14-ஆம் தேதி ஜாலான் ஸ்ரீ மஞ்சா, ஜாலான் PJU 1A/1 (பில்மோர்), ஜாலான் PJU 1A/46, PPR லெம்பா சுபாங், பூலாத்தான் சுல்தான், பண்டார் உத்தாமா மற்றும் பெர்சியாரான் சூரியான் உள்ளிட்ட பல இடங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனை MBPJ இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

வடிகால் அமைப்புகளைத் தூய்மையாகவும் சீராகவும் செயல்படச் செய்வதன் மூலம் மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதிப்படுத்துவதுடன், குறிப்பாக கனமழையின்போது திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்க முடியும் என மாநகராட்சி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.