பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24: திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், வெள்ளம் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) வடிகால்கள், 'ஸ்க்ரப்பர் டிரெய்ன்' மற்றும் 'மான்சூன் டிரெய்ன்' ஆகியவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்து வருகிறது.
இந்தத் தூய்மைப் பணிகளை கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (KDEBWM) மேற்கொண்டு வருவதாகவும், இதன்வழி வடிகால் அமைப்பு எப்போதும் தூய்மையாகவும் சிறப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்வதாகவும் எம்பிபிஜே தெரிவித்தது.
"வடிகால் அமைப்பு சிறந்த நிலையில் இருப்பதையும், உகந்த முறையில் செயல்படுவதையும் உறுதிசெய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்," என்று எம்பிபிஜே ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இப்பணிகளில் ஜாலான் ஹராப்பான், ஜாலான் SS4D/10, ஜாலான் தெரோவோங் FAS, ஜாலான் SS22/3, தாமான் புவானா PJS3, ஜாலான் SS21/60, ஜாலான் PJS 2/2, ஜாலான் 51A/223, ஜாலான் 19/4, ஜாலான் 23/4 மற்றும் ஜாலான் SS25/41 ஆகிய பகுதிகள் அடங்கும்.
மேலும், கம்போங் செம்பாக்காவில் வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி மீண்டும் தூய்மையாகவும், குடியிருப்பாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
பொதுமக்கள் குப்பைகளை வடிகால்களிலோ அல்லது பொது நீர் வழிகளிலோ கொட்ட வேண்டாம் என்று எம்பிபிஜே நினைவூட்டியது.
"திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கும் வடிகால் அடைப்புகளைத் தவிர்க்க இந்த நடவடிக்கை முக்கியம்," என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
மக்களின் நலனுக்காகப் பல்வேறு அரசு நிறுவனங்களுடன் இணைந்து வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் எம்பிபிஜே கூறியது.
திடீர் வெள்ளத்தைத் தடுக்க வடிகால்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் - எம்பிபிஜே
24 ஏப்ரல் 2026, 9:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கக் 'கிளீன் அண்ட் கிரீன் 2026' திட்டம் - செந்தோசா தொகுதி
Shalini Rajamogun
5 ஜூன் 2026

national
பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றத்திற்காக 78 பேர் சமூக சேவை உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டனர்
Shalini Rajamogun
29 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் அரசுக்கு வெள்ளத் தணிப்பு, தூய்மை முதன்மையான முன்னுரிமை — மந்திரி புசார்
Shalini Rajamogun
29 டிசம்பர் 2025

selangor
பெட்டாலிங் ஜெயா மாநகரத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கைத் தம்பதியரின் குழந்தை
Shalini Rajamogun
22 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



