மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு உறுதி செய்யும் – பிரதமர்

15 நவம்பர் 2026, 2:16 AM
மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு உறுதி செய்யும் – பிரதமர்

கோலாலம்பூர், நவ.15: பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட அரசு தலைவர்களை எவ்வித அச்சமுமின்றி விமர்சிப்பதற்கும், தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு அரசு முழுமையாக மதிப்பளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளையில் மாணவர்களின் செயல்பாடுகள் வன்முறை அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் ஒரு பகுதியாக, 1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டத்தில் (AUKU) திருத்தங்களை மேற்கொண்டு, மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை நீக்குவதற்கான சட்ட மசோதா இன்னும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் அறிவித்தார்.

இதற்காக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காதிரிடம் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளதாகவும், சட்டத் திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அன்வார் கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் உள்ள 515-ஆவது தேசிய சேவைப் பயிற்சி முகாமில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய எதிர்பார்ப்புகளுக்கு AUKU சட்டம் முழுமையாகப் பொருந்தவில்லை என்பதால், அதனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என அன்வார் அறிவித்திருந்தார்.

1971-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டம் இதுவரை ஏழு முறை திருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் பல்கலைக்கழக வளாகங்களுக்கு வெளியே அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் மூலம் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மேலும் விரிவுபடுத்துவதுடன், அரசின் கொள்கைகள் மற்றும் தேசிய விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் தங்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.