மதத்தை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவோரையும் ஊழல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும் – மலாக்கா வாக்காளர்களுக்கு பிரதமர் வலியுறுத்து

14 நவம்பர் 2026, 2:00 AM
மதத்தை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவோரையும் ஊழல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும் – மலாக்கா வாக்காளர்களுக்கு பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ.14: அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இன்று நடைபெறவுள்ள மலாக்காவின் 16-ஆவது மாநிலத் தேர்தலில் வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவருமான அன்வார், ஊழலற்ற நாட்டை உருவாக்க விரும்பும் மக்கள் தங்களது வாக்குகள் மூலம் அதனை வெளிப்படுத்த இதுவொரு முக்கியமான வாய்ப்பு எனக் குறிப்பிட்டார்.

அரசியல் அதிகாரத்தையும் வாக்குகளையும் பெறுவதற்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சில தரப்பினரின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

இது தொடர்பாக தனது முகநூல் பதிவில் கருத்துத் தெரிவித்த அன்வார், ஊழலைக் கண்டும் காணாமல் இருப்பதும் அதனைச் சகித்துக்கொள்வதும் நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

எனவே, வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி ஊழலுக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மலாக்காவின் 16-ஆவது மாநிலத் தேர்தலில் மொத்தம் 675,166 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.