ஷா ஆலாம், செப்.22 — மலாக்கா சட்டமன்றம் (DUN) கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்ததும், 16ஆவது தேர்தலுக்கான (PRN) முக்கிய தேதிகளை நிர்ணயிப்பதற்காக தேர்தல் ஆணையம் (SPR) சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை SPRக்கு கிடைக்கவில்லை என SPR தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருன் கூறினார்.
அந்தச் சிறப்புக் கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் நாள், முன்கூட்டிய வாக்களிப்பு நாள் உள்ளிட்ட மலாக்கா மாநிலத் தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய தேதிகள் நிர்ணயிக்கப்படும்.
இதனிடையே, மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படும் என மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் அறிவித்துள்ளார்.
மலாக்கா சட்டமன்றத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே சட்டமன்றம் கலைக்கப்படவுள்ளது.







