புத்ராஜெயா, நவ. 13: தீபாவளி 2026 பண்டிகைக் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (SHMMP) கீழ், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை மீறி பொருட்களை விற்பனை செய்ததாக எந்தவொரு புகாரும் பெறவில்லை என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், அதிகபட்ச விலையை மீறி விற்பனை செய்ததாக ஒரு வழக்குகூட பதிவாகவில்லை என அமைச்சின் அமலாக்கப் பிரிவுத் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு இதே திட்டத்தின்போது ஆறு விலைக் கட்டுப்பாட்டு விதிமீறல்கள் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு அவ்வாறான குற்றங்கள் எதுவும் பதிவாகாதது வியாபாரிகளிடையே விதிமுறைகளைப் பின்பற்றும் போக்கு அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இவ்வாண்டு இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மொத்த அமலாக்க நடவடிக்கைகளின் எண்ணிக்கை 482 -ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 445-ஆகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கடந்த ஆண்டு 53,500 ரிங்கிட்டாக இருந்த அபராதத் தொகை, இவ்வாண்டு 50,800 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது. அதேபோன்று, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பும் 16,078 ரிங்கிட்டிலிருந்து 14,045 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.
மேலும், இவ்வாண்டு பதிவான பெரும்பாலான குற்றங்கள், வியாபாரிகள் கட்டாயமாகக் காட்சிப்படுத்த வேண்டிய இளஞ்சிவப்பு நிற சிறப்பு விலைக் குறியீட்டை வைக்கத் தவறியமை தொடர்பானவையாகும். இதற்காக மொத்தம் 481 வழக்குகள் பதிவாகியுள்ள







