தீபாவளி முடிந்து நகருக்குத் திரும்பும் மக்கள் : நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

9 நவம்பர் 2026, 8:28 AM
தீபாவளி முடிந்து நகருக்குத் திரும்பும் மக்கள் : நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், நவ 9 : தீபாவளி விடுமுறைக்குப் பிறகு பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிச் செல்லும் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை மூன்று மணி நிலவரப்படி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்தது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதையில் சுங்கை பட்டாணி செலாத்தானில் இருந்து பெர்தாம், சுங்கை துவாவில் இருந்து ஜூரு ஆட்டோசிட்டி, கோலா கங்சாரில் இருந்து மேரு குகைப்பாதை, சிம்பாங் புலாயில் இருந்து கோபெங் மற்றும் கோபெங்கில் இருந்து பிடோர் வரையிலான பகுதிகளில் வாகனங்கள் மிகவும் மெதுவாகச் சென்று கொண்டிருக்கின்றன.

அதே நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய பாதையில் கூலாயில் இருந்து சிம்பாங் ரெங்கம், ஆயர் குரோவில் இருந்து சிம்பாங் அம்பாட், பெடாஸ் லிங்கியில் இருந்து போர்ட்டிக்சன், பண்டார் ஐன்ஸ்டேலில் இருந்து நீலாய் உத்தாரா, சவுத்வில் சிட்டியில் இருந்து காஜாங் மற்றும் சுங்கை பெசியில் இருந்து மாநகர மையம் நோக்கிச் செல்லும் வழிகளிலும் கடுமையான நெரிசல் காணப்படுகிறது.

இது தவிர, கிழக்குக்கரை பகுதியில் இருந்து தலைநகரம் நோக்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், லான்சாங்கில் இருந்து காராக் சாலைக் கட்டண சாவடி, பெந்தோங்கில் இருந்து லெந்தாங் மற்றும் கெந்திங் செம்பாவில் இருந்து கோம்பாக் சாலைக் கட்டண சாவடி வரையிலான பாதைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

பல பகுதிகளில் பரவலாகப் பெய்து வரும் பலத்த மழையும் இந்த போக்குவரத்து மந்த நிலைக்குக் கூடுதல் காரணமாக அமைந்துள்ளதால், வாகனமோட்டிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடனும் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உடனுக்குடனான போக்குவரத்து நிலவரங்களை அறிந்துகொள்ள மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-88-7752 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.