ஷா ஆலாம், நவ. 12 – கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், செலாயாங், கோம்பாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இடங்களில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் செலாயாங் ஊராட்சி மன்றம் (MPS) தீவிரப்படுத்தியுள்ளது.
மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான வடிகால் கட்டமைப்புகளின் கொள்ளளவு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம், வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் நீர் தேங்குவதையும் பெருக்கெடுத்து ஓடுவதையும் கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கிடையில், வடிகால் அமைப்புகளை முறையாகப் பராமரித்தல், தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் தேவைக்கேற்ப அவற்றை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என MPS தெரிவித்துள்ளது.
இத்திட்டங்கள் மூலம் கனமழையின்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கின் தாக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நீண்டகால வெள்ளத் தடுப்பு உள்கட்டமைப்பையும் வலுப்படுத்த முடியும் என ஊராட்சி மன்றம் குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் பின்வரும் இடங்களை உள்ளடக்கியுள்ளன:
ஜாலான் பெசார் 9, 11, 11C மற்றும் 19A, செலாயாங் பாரு
ஜாலான் ஸ்ரீ செலாயாங் மற்றும் ஜாலான் 1, தாமான் ஸ்ரீ செலாயாங்
ஜாலான் வாங்சா 2/1, ஜாலான் வாங்சா 2/6 மற்றும் ஜாலான் வங்சா 2/7, தாமான் வங்சா பெர்மாய்
ஜாலான் 13D, 21, 22, 23 மற்றும் 30, செலாயாங் பாரு
ஜாலான் லக்சமானா 10, கம்போங் லக்சமானா
ஜாலான் பெருசாஹான் 1, பத்து கேவ்ஸ் தொழிற்பேட்டை
ஜாலான் வங்சா உத்தாமா, ஜாலான் வங்சா 1/2 மற்றும் ஜாலான் வங்சா 1/6, தாமான் வங்சா பெர்மாய்
ஜாலான் KSK உத்தாமா, கம்போங் சுங்கை கெர்தாஸ்
ஜாலான் NGP 2/1, நியூ கிரீன் பார்க்
கம்போங் லக்சமானா
தாமான் கோம்பாக் பெர்மாய்






