2027 சிலாங்கூர் பட்ஜெட் : AI கல்வியை விரிவுபடுத்த மாநில அரசு திட்டம்

11 நவம்பர் 2026, 1:03 PM
2027 சிலாங்கூர் பட்ஜெட் : AI  கல்வியை விரிவுபடுத்த மாநில அரசு திட்டம்

ஷா ஆலாம், நவ 11 : இவ்வாரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.

அந்தத் தொழில்நுட்பத்தில் பொதுமக்கள், தங்களின் அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதல் அரசாங்க அமைப்புகளுக்கு AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன; தற்போது மக்கள் இத்தொழில்நுட்பத்தை முழுமையாகக் கற்றுக்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஷா ஆலாம், செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 சிலாங்கூர் கல்வி உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த AI கல்வி சார்ந்த அம்சங்கள், மக்களிடையே இத்தொழில்நுட்பத்தை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்த 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மாநில பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகக் கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.