ஷா ஆலாம், அக் 2 : சிலாங்கூர் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் இன்று மாலை 5:00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூரில் கோம்பாக் (Gombak), உலு சிலாங்கூர் (Hulu Selangor) மற்றும் உலு லங்காட் (Hulu Langat) ஆகிய பகுதிகள் அந்த வானிலை பாதிப்பை எதிர்கொள்ளுமென மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அத்துடன் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், பகாங்கில் ஜெராண்டுட் மற்றும் ரொம்பின், கோலாலம்பூர், மற்றும் நெகிரி செம்பிலானில் ஜெலுபு மற்றும் சிரம்பான் ஆகிய இடங்களும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சரவாக்கில் மாத்து, டலாட் மற்றும் முக்கா ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம்.
சபாவில் ரானாவ், கோத்தா பெலுட், தம்புனான், சூக், கெனிங்காவ், சிபிடாங், தெனோம், பென்சியாங்கான், தாவாவ், குனாக், லகாட் டத்து, கலாபாகான், கினாபடாங்கான், பைத்தான், சண்டக்கான், லாபுக் மற்றும் சுகுட், தெலுபிட், கோத்தா மருடு மற்றும் பித்தாஸ் உட்பட பல பகுதிகளிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







