பருவமழை ஆபத்து: நீர்நிலை பொழுதுபோக்குகளைத் தவிர்க்க தீயணைப்புத்துறை எச்சரிக்கை

11 நவம்பர் 2026, 1:59 AM
பருவமழை ஆபத்து: நீர்நிலை பொழுதுபோக்குகளைத் தவிர்க்க தீயணைப்புத்துறை எச்சரிக்கை
பருவமழை ஆபத்து: நீர்நிலை பொழுதுபோக்குகளைத் தவிர்க்க தீயணைப்புத்துறை எச்சரிக்கை
பருவமழை ஆபத்து: நீர்நிலை பொழுதுபோக்குகளைத் தவிர்க்க தீயணைப்புத்துறை எச்சரிக்கை

ஷா ஆலாம், நவ 11 : வடகிழக்கு பருவமழை காலம் முடியும் வரை ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் கால்வாய் போன்ற பகுதிகளில் குளிப்பது, நீந்துவது, சுற்றுலா செல்வது அல்லது முகாம் அமைப்பது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு . தீயணைப்பு மீட்பு துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

திடீரென ஏற்படும் ' ஆற்று நீர் பெருக்கெடுத்தல் ' மற்றும் தொடர் மழையினால் ஆற்றின் நீர்மட்டம் மிக வேகமாக உயரும் அபாயம் இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோலா குபு பாருவில் உள்ள பெர்தாக் ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்த பெரும் சோகத்தைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அங்கு பொழுதுபோக்கு மற்றும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 8 பேர் , ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் மூவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதே வேளையில், அங்கு சிக்கியிருந்த 26 பேர் மீட்புக்குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவசர காலங்களில் உடனடியாக 999 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சரியான இருப்பிடத் தகவலை வழங்குமாறு தீயணைப்புத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.