டுங்குன், மே 27: நேற்றிரவு பாக்கா (R&R) அருகே, கிழக்குக் கரை விரைவு நெடுஞ்சாலை 2 (LPT2)-இன் 337.7ஆவது கிலோமீட்டரில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்; மேலும் 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இரவு 7.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், காயமடைந்த 4 பேரும் நிசான் அல்மேரா காரில் பயணம் செய்தவர்கள் என்று பாக்கா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கைக் கமாண்டர், மூத்த தீயணைப்பு அதிகாரி II முகமட் பக்ரி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
"காயமடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக தற்காப்புப் படை ஆம்புலன்ஸ் மூலம் டுங்குன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்," என்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
உயிர் தப்பிய மற்றவர்களில் டொயோட்டா வயோஸ் காரில் பயணித்த இருவர் மற்றும் புரோட்டான் பெர்சோனா காரில் பயணித்த இருவர் அடங்குவர் என்று முகமட் பக்ரி கூறினார்.
மேலும், டொயோட்டா வெல்ஃபையர் பல்நோக்கு வாகனத்தில் பயணித்த நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேரும், பெரோடுவா அட்டிவா காரில் பயணித்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரும் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
"மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் பாதிப்படைந்தவர்களில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மீட்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்," என்றும் அவர் கூறினார்.
எல்பிடி2 நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் மோதி விபத்து: இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்
27 மே 2026, 2:49 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் பலகாரக் கடையில் கார் மோதி விபத்து
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2026

national
சாலை தடுப்பில் கார் மோதி விபத்து: பெண் மரணம்; மகன் காயம்
Shalini Rajamogun
3 ஆகஸ்ட் 2026

national
டேங்கர் லாரி - மைவி கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு
Shalini Rajamogun
31 ஜூலை 2026

national
ஷா ஆலாமில் விபத்து: இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு
Shalini Rajamogun
14 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



