தீபாவளி விடுமுறை: முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

6 நவம்பர் 2026, 9:53 AM
தீபாவளி விடுமுறை: முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஷா ஆலாம், நவ.6 – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலைநகரிலிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இன்று பிற்பகல் நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய முக்கிய நெடுஞ்சாலைகளில் நண்பகல் முதல் படிப்படியாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (LLM) மற்றும் PLUS Malaysia Berhad ஆகியவற்றின் CCTV கண்காணிப்புத் தகவல்களின்படி, தலைநகரை விட்டு வெளியேறும் முக்கிய வழித்தடங்களில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.

வடக்கு நோக்கிய வழித்தடங்களில், டாமான்சாரா மற்றும் கோத்தா டாமான்சாரா பகுதிகளிலிருந்து சுங்கை பூலோ வரையிலும், அங்கிருந்து ராவாங் சுங்கச்சாவடி வரையிலும் போக்குவரத்து மெதுவடைந்துள்ளது. அதேபோல், மெனோரா சுரங்கப்பாதை பகுதியில் அதிகமான வாகனங்கள் காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

தெற்கு நோக்கிய வழித்தடங்களில், பாங்கியிலிருந்து நீலாய் மற்றும் சிரம்பான் செல்லும் பாதையில் வாகன நெரிசல் நிலவுகிறது. மேலும், ஆயர் குரோ சுங்கச்சாவடி வரையிலும் போக்குவரத்து மெதுவாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, வாகனமோட்டிகள் மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரைக்கும் பயண நேர அட்டவணையை (Travel Time Advisory – TTA) பின்பற்றி பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சாலைப் பயனர்கள் கவனமாக வாகனங்களைச் செலுத்துவதுடன், சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க Touch 'n Go அட்டை அல்லது மின்னணுப் பணப்பையில் போதுமான பண இருப்பு உள்ளதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.