புத்ராஜெயாவில் 9-வது மாடியிலிருந்து விழுந்து 17 வயது யுவதி பரிதாப மரணம்

9 நவம்பர் 2026, 2:24 AM
புத்ராஜெயாவில் 9-வது மாடியிலிருந்து விழுந்து 17 வயது யுவதி  பரிதாப மரணம்

புத்ராஜெயா, நவ 9 : புத்ராஜெயா, பிரசிண்ட் 17-ல் உள்ள பி.பி.ஏ.1.எம் செலாசே (PPA1M Selasih) அரசு ஊழியர் வீடமைப்புத் திட்ட அடுக்குமாடி வாகன நிறுத்தத்தின் 9-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் 17 வயது யுவதி ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

நேற்று அதிகாலை சுமார் 5:45 மணியளவில் அந்த கட்டிடத்தின் அருகே பொதுமக்களால் அந்த யுவதி கண்டெடுக்கப்பட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஐடி ஷாம் மொஹமெட் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முதற்கட்ட சோதனையில் இதில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் அல்லது சதித்திட்டங்களும் கண்டறியப்படவில்லை என்றும் போலீஸ் தெரிவித்தது.

இதனால் இந்த வழக்கு தற்போது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்த சிறுமி பிரசிண்ட் 16(1) (SMK Presint 16(1)) தேசிய இடைநிலைப் பள்ளியின் படிவம் ஐந்து மாணவி என்பது தெரியவந்துள்ளது.

தங்களின் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் நேற்று காலமானார் என்ற துயரமான செய்தியை அந்தப் பள்ளி நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தி, தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.