தாமான் ஸ்ரீ மூடா உட்பட சில பகுதிகளில் திடீர் வெள்ளம்; விழிப்பு நிலையில் தீயணைப்பு துறை

8 நவம்பர் 2026, 12:42 PM
தாமான் ஸ்ரீ மூடா உட்பட சில பகுதிகளில் திடீர் வெள்ளம்; விழிப்பு நிலையில் தீயணைப்பு துறை

ஷா ஆலாம், நவ 8 : ஷா ஆலாம், செக்க்ஷன் 25, தாமான் ஸ்ரீ மூடா, ஜாலான் கெபூன் (Jalan Kebun), செக்க்ஷன் 26-இல் உள்ள கம்போங் பாரு ஹைகோம் (Kampung Baru Hicom) மற்றும் செக்க்ஷன் 13 ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வடிகால்கள் நிரம்பி வழிந்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இன்று பிற்பகல் 3.15 மணி முதல் பெய்த பலத்த மழையின் காரணமாக, வெள்ள அபாயம் அதிகம் உள்ள தாழ்வான பல பகுதிகளில் நீர் தேங்கியது.

இதனிடையே, மழை நின்றதைத் தொடர்ந்து வெள்ள நீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளதாக, ஷா ஆலாம் தீயணைப்பு நிலையம் தெரிவித்துள்ளதாக

சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.

"சிலாங்கூர் தீயணைப்புத் துறை பணியாளர்கள் வெள்ள அபாயமுள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை பொதுமக்கள் யாரும் தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்படவில்லை," என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும், கணிக்க முடியாத தற்போதைய வானிலை மாற்றங்களுக்கு இடையே பொதுமக்கள் அனைவரும் எப்போதும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

தீயணைப்புத் துறையினரால் பகிரப்பட்ட புகைப்படங்களின்படி, இன்று பிற்பகல் 3.48 மணி முதல் 3.57 மணி வரையிலான காலக்கட்டத்தில் தாமான் ஸ்ரீ மூடா மற்றும் கம்போங் பாரு ஹைகோம் ஆகிய பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீர், அங்கிருந்த கார்களின் டயர்களின் பாதி அளவு வரை உயர்ந்திருந்தது என்பதும், பின்னர் சிறிது நேரத்திலேயே வடியத் தொடங்கியது என்பதும் தெரியவந்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.