4 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,234-ஆக உயர்வு

7 நவம்பர் 2026, 8:45 AM
4 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை  4,234-ஆக உயர்வு

ஷா ஆலாம், நவ 7 : நாட்டின் நான்கு மாநிலங்களில் , இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,234 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் அனைவரும் 9 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளதாகச் சமூக நலத்துறை தெரிவித்தது.

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி 1,252 பேராக இருந்த இந்த எண்ணிக்கை, மதியம் மிக வேகமாக அதிகரித்தது.

பெர்னாமா மற்றும் பெரிதா ஹரியான் செய்திகளின்படி, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக சிலாங்கூர் பதிவாகியுள்ளது.

சிலாங்கூரில் மட்டும் கோலா சிலாங்கூர், கோம்பாக் மற்றும் சபாக் பெர்னாம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 3,834 பேர் 4 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக பேராக்கில் ஹிலிர் பேராக் மற்றும் மஞ்சோங் ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 272 பேர் 3 நிவாரண மையங்களிலும், சபாவின் தாவாவ் மாவட்டத்தில் 121 பேரும், சரவாக்கின் மிரி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.