சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழாவை முன்னிட்டு 19 பேருக்கு உயரிய விருதுகள்

7 நவம்பர் 2026, 7:08 AM
சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழாவை முன்னிட்டு 19 பேருக்கு உயரிய விருதுகள்
சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழாவை முன்னிட்டு 19 பேருக்கு உயரிய விருதுகள்
சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழாவை முன்னிட்டு 19 பேருக்கு உயரிய விருதுகள்

கிள்ளான், நவ 7 - சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா-வின் 25 ஆண்டுகால ஆட்சி வெள்ளி விழாவை முன்னிட்டு, இன்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில், 19 பேருக்கு சிலாங்கூர் மாநிலத்தின் உயரியப் பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சிலாங்கூர் டத்தோ படுகா மஹ்கோத்தோ (D.P.M.S.) என்ற உயரிய பட்டம் பெற்ற எண்மரில், பிரிகேடியர் ஜெனரல் டத்தோ பஹ்லாவான் சஃப்வான் @ அஸ்ரி இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.

அவருடன், இஸ்தான்பூலுக்கான மலேசிய uயர் ஆணையர் அஹமத் அமிரி அபு பக்கார், கடற்படையின் ஹைட்ரோகிராபி பிரிவின் தலைமை இயக்குனர் அட்மிரல் டாக்டர் நஜ்ஹான் முஹமட் சைட், மாரா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டிஎஸ் டாக்டர் ஷஹ்ரின் சகிப் @ சகிபுதீன், நீர்-எரிசக்தி உருமாற்ற அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் ( எரிசக்தி பிரிவு) மரினா மஹ்புட்ஸ், எஸ் டி கத்ரி குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மோஹ்மத் ஹாரிஸ் மோஹ்மத் அர்ஷாத், YTL கழக குழுமத்தின் சட்ட ஆலோசகர் டத்தின் ஸ்ரீ காத்லீன் செ வாய் லின் மற்றும் கிராப் (Grab) நிறுவனத்தின் நிறுவனரான அந்தணி டான் பிங் யியூ ஆகியோர் அந்த உயரிய விருதைப் பெற்றனர்.

டத்தோ-சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா (D.S.S.S.) பட்டம் கோலா லங்காட் மாவட்ட நில அதிகாரி தெங்கு ரோஹானா தெங்கு நவாவி,சிலாங்கூர் பொதுப் பணித் துறையின் இயக்குநர் சுக்ரி இஷாக், கோலாலம்பூர் உலக வர்த்தக மைய குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஸ்ரீ டாக்டர் இர்மோகிசான் இப்ராகிம், தி ராயல் ஏசியாடிக் சங்க மலேசியக் கிளையின் தலைவர் தெங்கு முஹமட் பவுசி தெங்கு அப்துல் ஹமித், தேசிய கருவூல நிறுவன இயக்குநர் டத்தோ அமிருல் பைசல் வான் ஜாஹிர் மற்றும் மலேசியா ரிசோர்சஸ் கழக குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஆன் வான் தீ ஆகிய ஆறு பேருக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, செத்தியா மஹ்கோத்தா சிலாங்கூர் (S.M.S.) பட்டம் லெப்டினன்ட் கர்னல் அன்வார் சஹாரதோல் மட் கமால் மற்றும் தொடர்பு பல்லூடக ஆணைய மேம்பாட்டு தலைமை அதிகாரி என்.இ.ஸ்டெல்லா ஜீவானி ஆகியோருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இவ்வேளையில், செத்தியா-சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா (S.S.S.) பட்டம் கர்னல் மோஹ்மத் அஸ்லிசான் உடா, லெப்டினன்ட் கர்னல் டிஎஸ் டாக்டர் வோங் வாய் லூங் மற்றும் லெப்டினன்ட் கர்னல் மோஹ்மத் கைரி மோஹ்மத் யூசோப் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.

ஆலாம் ஷா அரண்மனையில் நடைபெற்ற இந்த விருதளிப்பு சடங்கில் , மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.