ஷா ஆலாம், நவ 4 - இன்று அதிகாலை பெய்த பலத்த மழையால், பாலம் உள்வாங்கியதை அடுத்து, சுங்கை பூலோவில் உள்ள பாயா ஜாராஸ்-சையும் குபு காஜா-வையும் இணைக்கும் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
ஜாலான் காஜா 16 அருகில் உள்ள ஜாலான் குபு காஜாவிலிருந்து பாயா ஜாராஸ் நோக்கிச் செல்லும் பாலம் இதில் பாதிக்கப்பட்டது.
இதனால் ஜாலான் காஜா 16 மற்றும் ஜாலான் காஜா 15 சந்திப்புகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து வழிகளையும் போலீசார் மூடினர்.

மேலும், பாயா ஜாராஸிலிருந்து ஜாலான் காஜா 23 மற்றும் ஜாலான் காஜா 24 சந்திப்புகள் வழியாக குபு காஜா செல்லும் பாதையும் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பயணிகள் மெர்பாவ் செம்பாக் மற்றும் குபு காஜா ஆகிய இடங்களுக்குச் செல்ல ஜாலான் கோலா சிலாங்கூர் (FT54) சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.






