சிலாங்கூரில் கொட்டித் தீர்த்த கனமழை: பல இடங்களில் திடீர் வெள்ளம்

2 நவம்பர் 2026, 10:46 AM
சிலாங்கூரில் கொட்டித் தீர்த்த கனமழை: பல இடங்களில் திடீர் வெள்ளம்
சிலாங்கூரில் கொட்டித் தீர்த்த கனமழை: பல இடங்களில் திடீர் வெள்ளம்
சிலாங்கூரில் கொட்டித் தீர்த்த கனமழை: பல இடங்களில் திடீர் வெள்ளம்
சிலாங்கூரில் கொட்டித் தீர்த்த கனமழை: பல இடங்களில் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர், நவ 2: இன்று மாலை பெய்த கனமழை காரணமாக, சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் கோலாலம்பூரின் சில முக்கிய இடங்களிலும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து, போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பகிர்ந்து வரும் தகவல்களின்படி, டெனாய் ஆலாம், புஞ்சாக் ஆலாம், சுங்கை பூலோ, சௌஜானா உத்தாமா, சுபாங், டாமன்சாரா அப்டவுன் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகள் இந்தத் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

டெனாய் ஆலாமில், வாகனமோட்டிகள் சிலர், வெள்ள நீர் சூழ்ந்ததால், தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் திரும்பிச் செல்ல நேரிட்டதாகப் பதிவிட்டனர்.

அவர்களில் சமூக ஊடகப் பயனர் ஒருவரான (Threads: @iskandarsukandar), வாகனங்கள் வெள்ளத்தின் காரணமாகத் தங்களின் பாதையை மாற்றி, எதிர்த் திசையில் (எதிர் திசைப் போக்குவரத்து) செல்வதைப் பகிர்ந்துள்ளார்.

டெனால் ஆலாமில் என்ன நடக்கிறது. ஏன் எல்லோரும் எதிர்திசையில் திரும்பிச் செல்கின்றனர். அங்கு வெள்ளமா? என வினவியுள்ளார்.

இதனிடையே, DASH நெடுஞ்சாலையிலிருந்து டேனாய் ஆலாம் பகுதிக்குள் நுழையும் வாகனமோட்டிகள், சிக்னலைக் கடந்தவுடன் உடனடியாகத் திரும்பிச் செல்லுமாறு மற்றொரு பயனர் (@kiti.ss) எச்சரித்துள்ளார்.

ஜொஹாவாக்கி (Johawaki) பகுதியிலிருந்து டெனாய் ஆலாம், கால்டெக்ஸ் (Caltex) எரிபொருள் நிலையம் நோக்கிச் செல்லும் பாதையில் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் காணொளியை @afiff_15 என்பவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே, புஞ்சாக் ஆலாம் பகுதியில் உள்ள புஞ்சாக் பெர்டானா , UiTM பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் மொக்தார் டஹாரி சாலையிலும் (Jalan Mokhtar Dahari) வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாலை பெய்த மழையில் மத்தாஹாரி பேரங்காடிக்கும் டெனாய் ஆலாமுக்கும் இடையில் வெள்ளம் ஏற்பட்டது. படம் : திரெட்ஸ்

அதையடுத்து, வாகனமோட்டிகள் புஞ்சாக் பெர்டானாவிற்குச் செல்ல DASH நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுங்கை பூலோ பகுதியில், ஜாலான் பைப் (Jalan Paip) பகுதியில் உள்ள ஒரு கோயிலின் அருகிலும், எல்மினா கிரீன் (Elmina Green), சௌஜானா உத்தாமா 3 (Saujana Utama 3) மற்றும் அங்கெரிக் கார்டன் (Anggerik Garden) ஆகிய இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இவ்வேளையில், டாமன்சாரா அப்டவுன் (Damansara Uptown) பகுதியில், 'தி ஸ்டார்லிங்' (The Starling) வணிக வளாகத்தின் அருகில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுபாங் , புரோட்டான் (Proton) நிறுவனத்தின் அருகிலுள்ள சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், USJ 9 பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

சுபாங், புரோட்டோன் அருகில் வெள்ளப் பாதிப்பு. படம் : திரெட்ஸ்

பெட்டாலிங் ஜெயாவில் 'அம்கார்ப் மால்' (Amcorp Mall) அருகிலுள்ள கூட்டரசு நெடுஞ்சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதனிடையே, சிலாங்கூர் மட்டுமின்றி கோலாலம்பூரின் சில பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TTDI) மற்றும் புக்கிட் ஜாலில் (Bukit Jalil) ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புக்கிட் ஜாலிலிலிருந்து புச்சோங் செல்லும் சாலையில் வெள்ள நீர் உயரத் தொடங்கியுள்ளதாகப் பயணிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.