சிலாங்கூரில் எஸ்பிஎம் தேர்வெழுதும் 70,000 மாணவர்களுக்கு இலவச காலை உணவு

2 நவம்பர் 2026, 4:09 AM
சிலாங்கூரில் எஸ்பிஎம் தேர்வெழுதும் 70,000 மாணவர்களுக்கு இலவச காலை உணவு
சிலாங்கூரில் எஸ்பிஎம் தேர்வெழுதும் 70,000 மாணவர்களுக்கு இலவச காலை உணவு
சிலாங்கூரில் எஸ்பிஎம் தேர்வெழுதும் 70,000 மாணவர்களுக்கு இலவச காலை உணவு

ஷா ஆலாம், நவ 2 : சிலாங்கூரில் 2026-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் (SPM) தேர்வு எழுதும் சுமார் 70,000 மாணவர்கள் தேர்வு காலம் முழுவதும் அம்மாநில அரசின் கீழ் இலவச காலை உணவைப் பெறவுள்ளனர்.

மாணவர்கள் தேர்வைச் சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கும், அவர்களின் உற்சாகத்தை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி

ஷா ஆலாம், செக்க்ஷன் 19 ஒருங்கிணைந்த சமயப் பள்ளியில் நடைபெற்ற 'நுட்ரிசெல் மற்றும் மெகாநுட்ரிசெல் 2026' (Nutrisel & Meganutrisel) திட்டத்தின் அடையாளப் பரிமாற்ற விழாவிற்குப் பிறகு அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அடுத்த வாரம் நிறைவடையவுள்ள 'மெகா நுட்ரிசெல் சிலாங்கூர்' திட்டத்தின் மூலம், சிலாங்கூர் முழுவதும் உள்ள 962 பள்ளிகளைச் சேர்ந்த 993,670 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இதில் முழுநேர தங்குமிட வசதி கொண்ட பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் படிவம் 6 கல்லூரிகளின் மாணவர்களும் அடங்குவர்.

1 கோடியே 44 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் கடந்த ஆகஸ்ட் 3 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை 100,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இலவச காலை உணவு வழங்கும் திட்டமாக இந்த 'நுட்ரிசெல்' திட்டம் தொடங்கப்பட்டது.

குறிப்பாக மாத வருமானம் RM2,000-க்கு கீழ் உள்ள B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பின்னர், கடந்த அக்டோபர் மத்தியில் இது 'மெகா நுட்ரிசெல்' திட்டமாக விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்தான உணவை வழங்கி ஆதரிக்கும் மாநில அரசின் முக்கிய முயற்சியாக மாறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.