வடகிழக்குப் பருவமழை: வெள்ளத்தால் ஓர் உயிர் கூட பிரியக்கூடாது

1 நவம்பர் 2026, 4:27 AM
வடகிழக்குப் பருவமழை: வெள்ளத்தால் ஓர் உயிர் கூட பிரியக்கூடாது
வடகிழக்குப் பருவமழை: வெள்ளத்தால் ஓர் உயிர் கூட பிரியக்கூடாது
வடகிழக்குப் பருவமழை: வெள்ளத்தால் ஓர் உயிர் கூட பிரியக்கூடாது
வடகிழக்குப் பருவமழை: வெள்ளத்தால் ஓர் உயிர் கூட பிரியக்கூடாது

கோலாலம்பூர், நவ 1 : வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் தொடர்பான இறப்புகள் எதுவுமே நிகழக் கூடாது என்பதை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கூட்டு முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என்று 'இகாதான் கொமுனிட்டி செலமட்' ( Ikatan Komuniti Selamat) அமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை வலியுறுத்தியுள்ளார்.

பலத்த மழையையும் வெள்ளத்தையும் நாம் தவிர்க்க முடியாது என்றாலும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியாத ஒன்றாக நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பருவமழைக் காலத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் இல்லாத நிலை, தடுக்கக்கூடிய மரணங்கள் மற்றும் தவிர்க்கக்கூடிய துயரங்கள் ஏதும் நிகழா வண்ணம் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து வைத்திருப்பது, வடிகால் அமைப்புகளைச் சீரமைப்பது, தற்காலிக நிவாரண மையங்களைத் தயார் நிலையில் வைப்பது மற்றும் அவசரக் காலப் பொருட்கள் போதுமான அளவு இருப்பது ஆகியவற்றை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு(NADMA), தீயணைப்பு - மீட்புத்துறை, போலீஸ் மற்றும் உள்ளூர் நகராட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

இது முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவும், தேவையான போது மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் உதவும்.

பொதுமக்கள் வெள்ள நீரில் நடப்பதையோ, மோட்டார் சைக்கிள் அல்லது கார்களை ஓட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கனமழையின் போது ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதோடு, அதிகாரிகளின் வெளியேற்ற உத்தரவுகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும்.

அத்துடன், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற நலிவடைந்த பிரிவினருக்கு அண்டை வீட்டாரும் சமூகமும் உதவ முன்வர வேண்டும்.

அவசரக் காலத் தேவைகளுக்கான உணவு, அத்தியாவசிய மருந்துகள், குடிநீர் மற்றும் முக்கியமான ஆவணங்களை எப்போதுமே தயாராக வைத்திருக்க வேண்டும்.

வெள்ளத் தடுப்பு மற்றும் தயார்நிலை என்பது அரசாங்கத்தின் அல்லது அவசரக்கால மீட்புப் படையினரின் பொறுப்புமட்டும் அல்ல என்று குறிப்பிட்ட லீ லாம் தை, தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என அனைவருக்கும் இதில் முக்கியப் பங்கு உள்ளது என்று கூறினார்.

வெள்ளம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால் தடுக்கக்கூடிய மரணங்கள் நிகழக் கூடாது.

ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்பதால், இந்த பருவமழைக் காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அனைத்து மட்டங்களிலும் பொறுப்புணர்வோடு கூடிய கூட்டு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.