ஸ்பெயின் ரயில் விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் அன்வார் ஆழ்ந்த இரங்கல்

29 அக்டோபர் 2026, 2:43 AM
ஸ்பெயின் ரயில் விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் அன்வார் ஆழ்ந்த இரங்கல்

கோலாலம்பூர், அக்.29: ஸ்பெயினில் ரயில்கள் மோதிய கோர விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

தற்போது இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள ஸ்பெயின் மக்களுடன் மலேசியா துணைநிற்கும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் மலேசிய மக்களின் பிரார்த்தனைகளும் இருப்பதாகத் தெரிவித்த அன்வார், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் அயராது உழைத்து வருபவர்களுக்கும் அவர் தனது மரியாதையைத் தெரிவித்தார்.

நேற்று ஸ்பெயினின் மத்திய பகுதியில் நிகழ்ந்த அதிவேக ரயில் மோதல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 64-ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த ஜனவரி மாதம் அடாமுஸ் நகருக்கு அருகே நிகழ்ந்த ரயில் விபத்தைக் காட்டிலும் இந்தச் சம்பவம் மோசமானதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மட்ரிட்டில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.