மலேசியத் தோட்டத் தொழில் நிறுவனங்கள் இந்தோனேசியக் காட்டுத் தீயில் சம்பந்தப்படவில்லை

27 அக்டோபர் 2026, 9:26 AM
மலேசியத் தோட்டத் தொழில் நிறுவனங்கள் இந்தோனேசியக் காட்டுத் தீயில் சம்பந்தப்படவில்லை

ஷா ஆலாம், 27 அக்: இந்தோனேசியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ சம்பவங்களில் மலேசியத் தோட்டத் தொழில் நிறுவனங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.

மலேசியப் செம்பனை எண்ணெய் வாரியத்தின் (MPOB) கண்காணிப்பின் மூலம், கண்டறியப்பட்ட தீ விபத்துகள் மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் இருந்து தொடங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது என தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்தார்.

இன்று மலாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையில் நடந்தது என்னவென்றால், தீ வேறு பகுதிகளில் இருந்து பரவி வந்துள்ளது.

மலேசியத் தோட்ட நிறுவனங்கள் அனைத்தும் திறந்தவெளி எரிப்பைத் தடை செய்யும் கடுமையான தரநிலைகளுக்குக் கட்டுப்பட்டவை ஆகும்.

இதில் நிலையான செம்பனை எண்ணெய்க்கான வட்டமேஜை (RSPO) மற்றும் மலேசிய நிலையான செம்பனை எண்ணெய் சான்றிதழ் (MSPO) ஆகியவையும் அடங்கும்," என்று கூறினார்.

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காடு மற்றும் நிலத்தீ சம்பவங்களுக்கு மலேசியாவோடு தொடர்புடைய 21 நிறுவனங்களே காரணம் என்று அந்நாட்டு அரசு சாரா அமைப்பு ஒன்று சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் நோராய்னி இதனை விளக்கினார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.