கின்ராரா தொகுதியில் 800-க்கும் மேற்பட்டோருக்கு 'ஜோம் ஷாப்பிங்' தீபாவளி உதவி

24 அக்டோபர் 2026, 6:37 AM
கின்ராரா தொகுதியில் 800-க்கும் மேற்பட்டோருக்கு 'ஜோம் ஷாப்பிங்' தீபாவளி உதவி

பூச்சோங், அக் 24: இவ்வாண்டு கின்ராரா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மக்கள், தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள தீபாவளி 'ஜோம் ஷாப்பிங்' (Jom Shopping) பற்றுச் சீட்டுகளைப் (வவுச்சர்) பெற்றனர்.

இது 2025 -ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சுமார் 600 பேருடன் ஒப்பிடுகையில் 30 % அதிகமாகும்.

இப்பகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 30,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதையும், அதில் இந்திய சமூகம் 15 முதல் 18 % வரை இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

பண்டார் கின்ராரா ஜையண்ட் சூப்பர் மார்க்கெட்டில், ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் மக்களை கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் சந்தித்தார்

"இதற்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, அதிகமானோர் இந்த உதவியின் மூலம் பயனடையும் வகையில் கூடுதல் ஒதுக்கீட்டைப் பெற நாங்கள் முயற்சி செய்தோம்," என்றாரவர்.

இன்று காலை பண்டார் கின்ராரா ஜையண்ட் (Giant Bandar Kinrara) சூப்பர் மார்க்கெட்டில், ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகித்தப் பின்னர் அவர் மீடியா சிலாங்கூரிடம் பேசினார்.

பண்டார் கின்ராரா ஜையண்ட் சூப்பர் மார்க்கெட்டில், ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற்று கொள்ளும் மக்கள்

பிங்காஸ் (BINGKAS ) எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித்தொகை உள்ளிட்ட பிற உதவிகள் அல்லது சலுகைகளைப் பெறாத குடும்பங்களுக்கு இந்த பற்றுச் சீட்டு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது என மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான ஸீ ஹான் கூறினார்.

பண்டார் கின்ராரா ஜையண்ட் சூப்பர் மார்க்கெட்டில், ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் மக்களை கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் சந்தித்தார்

முன்னதாக, இவ்வாண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 52 லட்சத்து 70,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 26,354 தீபாவளி வவுச்சர்கள் விநியோகிக்கப்படுமென,வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு கூறியிருந்தார்.

பண்டார் கின்ராரா ஜையண்ட் சூப்பர் மார்க்கெட்டில், ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் மக்களை கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் சந்தித்தார்

இந்தத் திட்டம் அக்டோபர் 17 முதல் நவம்பர் 7 வரை அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வவுச்சர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.