600 பத்து தீகா தொகுதி மக்கள் ஜோப் ஷோப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்

5 நவம்பர் 2026, 4:10 AM
600 பத்து தீகா தொகுதி மக்கள் ஜோப் ஷோப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்

ஷா ஆலாம், நவ 5 : பத்து தீகா தொகுதியைச் சேர்ந்த 600 குடியிருப்பாளர்களுக்கு தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள தீபாவளி ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்களின் செலவினச் சுமையைக் குறைக்கும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் இந்த உதவி வழங்கப்பட்டது.

தற்போதைய வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு மத்தியில் இந்த உதவி குடும்பங்களின் பண்டிகை கால முன்னேற்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக இருக்குமென பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல்-ரஷித் ஹாரோன் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் இவ்வாண்டு மொத்தம் 26,354 தீபாவளி வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக மாநில அரசாங்கம் RM5.27 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இத்திட்டம் சிலாங்கூரின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 7 வரை செயல்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.