சீனாவின் திபெத்தில் 7 மெக்னீட்யூட் அளவிலான வலுவான நிலநடுக்கம்

22 அக்டோபர் 2026, 4:43 PM
சீனாவின் திபெத்தில் 7 மெக்னீட்யூட் அளவிலான வலுவான நிலநடுக்கம்

திபெத், அக் 23 - வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:33 மணியளவில் சீனாவின் திபெத் பகுதியில் ரிக்டர் அளவில் 7 மெக்னீடூட்டாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என் சீன நிலநடுக்க நெட்வொர்க்ஸ் மையம் (CENC) தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் திபெத்தின் வடக்கே உள்ள நாக்ஷு (Nagqu) பகுதியில், பூமியிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் மையமிட்டிருந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியிலிருந்து 5 கி.மீ சுற்றளவிலான பகுதி சுமார் 4,864 மீட்டர் சராசரி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், சுற்றியுள்ள பகுதிகளில் மிக வலுவாக உணரப்பட்டன.

மேலும், இதன் மையப்புள்ளி திபெத்தின் தலைநகரான லாசாவிலிருந்து (Lhasa) சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-சீன எல்லைப் பகுதிகளில் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.

அந்த இயற்கை பேரிடர் ஏற்பட்ட சில வாரங்களிலேயே தற்போது இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் உண்டான உயிர்ச்சேதங்கள் அல்லது பொருட் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.