ஷா ஆலம், டிசம்பர் 22- அலோர் ஸ்டார், பெர்சியாரான் தாமான் ஜெராகான் பகுதியில் உள்ள அம்பாங் ஜஜார் ஆற்றில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் மூழ்கினார்.
காலை 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக கெடாவின் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மூத்த செயல்பாட்டுத் தளபதி, தீயணைப்பு கண்காணிப்பாளர் II நோராஸ்வான் ஹாஷிம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் (BBP) சேர்ந்த 19 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு காவல்துறையும் மலேசிய கடல்சார் துறையும் (JLM) உதவிச் செய்து வருவதாக அவர் கூறினார். 999 அவசர அழைப்பு எண் வழியாகப் பெறப்பட்ட தகவலின்படி, கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாகவும், அதில் ஒரு நபர் இருந்ததாகவும் நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
மதியம் 12.30 மணிக்குத் தொடங்கிய தேடுதல் நடவடிக்கை, பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிப்பதற்காக மாலை 2 மணி வரை தொடர்ந்ததாக அவர் கூறினார்.


