Waze செயலிக்கு மாற்றான 'TuJu' செயலியின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

22 அக்டோபர் 2026, 8:58 AM
Waze செயலிக்கு மாற்றான 'TuJu' செயலியின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் கோபிந்த் சிங் டியோ
Waze செயலிக்கு மாற்றான 'TuJu' செயலியின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

ஷா ஆலாம், அக் 22 - வேஸ் (Waze) செயலிக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட உள்ளூர் செயலியான துஜுவின் (TuJu ) செயல்பாடு திருப்திகரமாக இல்லை என பயனர்கள் சுட்டிக் காட்டியிருப்பதை அடுத்து, அதன் செயல்பாடுகள் மேம்படுத்தப்படவிருக்கின்றன.

தற்போதைய நிலையில் அந்தச் செயலி நெடுஞ்சாலைகளை மட்டுமே கண்காணித்து வரும் வேளையில், இனி பயனர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைகளுக்குச் செல்லும் பிற சாலைகளின் போக்குவரத்து நிலவரங்களையும் உள்ளடக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்படும் என இலக்கவியல் (டிஜிட்டல்) அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

'வேஸ்' செயலிக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட துஜு செயலியின் செயல்திறன் திருப்திகரமாக இல்லை என்றும், மக்கள் அதன் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர் என்றும் மக்களவையில்

பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோங் ஷெஃபுரா ஒத்மான் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ,

அந்தச் செயலியின் செயல்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டார்.

அரசாங்கம் ரீதியான அதிகாரப்பூர்வ தேவைகளுக்கு வேஸ் செயலியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியதற்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கினார்.

வேஸ் செயலியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, அதன் பயன்பாடு இஸ்ரேல் நாட்டின் சட்ட வரம்பிற்கு உட்பட்டதாகும்.

இதனால் எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால், மலேசிய மக்கள் அந்நாட்டின் சட்ட அமைப்பின் மூலம் உரிய பாதுகாப்பையோ தீர்வையோ பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பயனர்கள் வேஸ் செயலியைத் தீவிரமாகப் பயன்படுத்தாதபோதும், அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும், இத்தகைய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சார்ந்த காரணங்களினாலேயே அதிகாரப்பூர்வ அரசுப் பணிகளுக்கு வேஸ் செயலி தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கோபிந்த் சிங் டியோ தெளிவுபடுத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.