Waze செயலியைப் பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடை

21 அக்டோபர் 2026, 6:14 AM
Waze செயலியைப் பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடை

ஷா ஆலாம், அக். 21 – தேசிய இணையப் பாதுகாப்புக் குழுவின் (JKSN) முடிவைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் சாலை வழிகாட்டி செயலியான வேஸ் (Waze) பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அனைத்து அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களும் அரசுத் துறைத் தலைவர்களும் இந்த உத்தரவைத் தங்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டால், பிரதமர் துறையின் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கீழ் இயங்கும் தேசிய இணையப் பாதுகாப்பு முகமையைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வேஸ் செயலிக்கு மாற்றாக மலேசியாவில் உருவாக்கப்பட்டுள்ள துஜு (TuJu) வழிகாட்டிச் செயலியைப் பொதுமக்கள் பயன்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஊக்குவித்திருந்தார்.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (LLM) உருவாக்கப்பட்டுள்ள துஜு செயலி, உள்ளூர் மாற்றுத் தெரிவாக முன்மொழியப்பட்டுள்ளது.

தமது முகநூல் பதிவில் இதனைத் தெரிவித்த அன்வார், வேஸ் செயலியின் பயன்பாடு தொடர்பாகத் தகவல் பாதுகாப்பு மற்றும் மக்களின் பயணத் தரவுகளின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

வேஸ் செயலி இஸ்ரேலியச் சட்டங்களுக்கு உட்பட்டிருப்பதால் மக்களின் தகவல்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பான தரவுகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய இணையப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அன்வார் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.