புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து 3 அமைச்சுகள் முடிவெடுக்கும்: கல்வி அமைச்சர் ஃபத்லினா

20 அக்டோபர் 2026, 11:59 AM
புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து 3 அமைச்சுகள் முடிவெடுக்கும்: கல்வி அமைச்சர் ஃபத்லினா

கோலாலம்பூர், அக் 20 : தற்போது நிலவி வரும் புகைமூட்டம் காரணமாகப் பள்ளிகளை மூடுவது குறித்த எந்தவொரு முடிவும், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுகளும் இணைந்தே முடிவெடுக்கும்.

அமைச்சுகளின் தத்தம் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கூட்டாகவே அந்த முடிவு எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காற்றின் தரம் மற்றும் சுகாதாரக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும்;

அதே நேரத்தில் பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டால் மாணவர்களின் கற்றல் இழப்பில் ஏற்படும் பாதிப்புகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவுடன் இணைந்து ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் (IPG) மலாய் மொழி வளாகத்தில் இன்று நடைபெற்ற ' 2026 பகடிவதை எதிர்ப்புச் சட்டம் ' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

"அவ்வப்போது, இந்த மூன்று அமைச்சுகளும் ஒன்றிணைந்து, குறிப்பாக சுகாதார அமைச்சும், இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சும் தத்தம் நிபுணத்துவத்தின் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்கும்.

பள்ளி மூடல்கள் தொடர்ந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை நாங்கள் அறிவோம் என்பதால், இந்த நிலை நீடிக்காது என்றும் நம்புகிறோம்.

எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் மிகவும் கவனமான அணுகுமுறையும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது," என்று அமைச்சர் தெரிவித்தார்.

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.