புகைமூட்டம்: சிலாங்கூரில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்

19 அக்டோபர் 2026, 9:17 AM
புகைமூட்டம்: சிலாங்கூரில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்

ஷா ஆலாம், அக். 19 – சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புகைமூட்டத்தால் மாணவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்து.

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் புகைமூட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தங்களது பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம் எனக் கவலைப்படும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கல்வித் துறை தெரிவித்தது.

மேலும், பள்ளி நிர்வாகிகள் மலேசிய சுற்றுச்சூழல் துறை (DOE) வெளியிடும் காற்று மாசுக் குறியீட்டு (IPU/API) அளவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உடல்நலப் பாதிப்புகளுக்கு அதிக ஆபத்துள்ள பிரிவில் இருக்கும் மாணவர்களின் நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகைமூட்டம் தொடர்பான துல்லியமான மற்றும் அண்மைய தகவல்களைப் பெற்றுக்கொள்ள, பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பு தளங்கள் அல்லது சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.