மக்களின் பாதுகாப்பிற்காக செகிஞ்சானில் 4 சூரியசக்தி LED விளக்குகள் பொருத்தப்பட்டன

18 அக்டோபர் 2026, 6:34 AM
மக்களின் பாதுகாப்பிற்காக செகிஞ்சானில் 4 சூரியசக்தி LED விளக்குகள் பொருத்தப்பட்டன

ஷா ஆலாம், அக். 18 – சிலாங்கூர், செகிஞ்சானில் உள்ள பாரிட் 5 மற்றும் பாரிட் 8 பகுதிகளில் பொதுமக்களின் இரவு நேரப் பயணத்தை எளிதாக்குவதுடன், பாதுகாப்பையும் மேம்படுத்த நான்கு சூரிய சக்தியில் இயங்கும் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டம் உள்ளூர் மக்களின் வசதிகளையும் பாதுகாப்பையும் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

சூரிய சக்தி LED விளக்குகளுக்குத் தனியான மின்சார விநியோகம் தேவையில்லை. பகல் நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலைச் சேமித்து, இரவு நேரங்களில் வெளிச்சத்தை வழங்கும் வகையில் அவை செயல்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.

செகிஞ்சான் மண்டல 4-இன் நகராட்சி மன்ற உறுப்பினர் முகமட் மசூடி ஜுப்ரியின் பரிந்துரையைத் தொடர்ந்து, உள்கட்டமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் இந்த சூரிய சக்தி விளக்குகளைப் பொருத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.