ஷா ஆலாம், அக்.16 – சிலாங்கூரின் 7 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலை எச்சரிக்கை பெட்டாலிங், கிள்ளான், கோலா சிலாங்கூர், கோலா லங்காட், சிப்பாங், சபாக் பெர்னாம் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களுக்குப் பொருந்தும்.
MetMalaysia தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, புத்ராஜெயா, பெர்லிஸ் மற்றும் மலாக்கா மாநிலம் முழுவதும் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் வானிலை நிலவரங்களைக் கவனத்தில் கொண்டு, வெளிப்புற நடவடிக்கைகளின்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வானிலை தொடர்பான அண்மைய மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கு www.met.gov.my என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
அத்துடன், MetMalaysia-வின் சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது myCuaca கைப்பேசிச் செயலி வாயிலாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.





