அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு: தாய்மார்களின் நலனுக்கு முக்கியத்துவம்

10 அக்டோபர் 2026, 9:11 AM
அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு: தாய்மார்களின் நலனுக்கு முக்கியத்துவம்

கோலாலம்பூர், அக். 10 – அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகபட்சம் 98 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது பணிப் பொறுப்புகள், பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நல மீட்சி மற்றும் பிறந்த குழந்தையைப் பராமரித்தல் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேண வேண்டிய தாய்மார்களின் தேவைகளை அங்கீகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

UUM பல்கலைக்கழகத்தின்பயன்பாட்டு உளவியல், கொள்கை மற்றும் சமூகப் பணிக்கான ஆய்வு மையத்தின் மூத்த விரிவுரையாளரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ராஜ்வானி முகமட் ஸைன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகப்பேறு விடுப்புக் காலம் நீட்டிக்கப்படுவதன் மூலம் தாய்மார்களுக்கு புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை பழகிக்கொள்ள அதிக அவகாசம் கிடைப்பதாக அவர் கூறினார்.

மேலும், குழுந்தைகளுக்கும் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் தாயுடன் செலவிடும் நேரம் மிகவும் முக்கியமானது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பை உருவாக்குவதுடன், குழந்தையின் தேவைகளைத் தாய்மார்கள் சிறப்பாகப் புரிந்துகொண்டு கவனித்துக்கொள்ளவும் உதவும்.

அரசாங்க அலுவலகங்களில் இயங்கும் குழந்தைப் பராமரிப்பு மையங்களை மேம்படுத்துவதற்காக RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்த அவர், இம்மையங்கள் பாதுகாப்பான, தரமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சூழலைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், குழந்தைகளைப் பராமரிக்கும் பணியாளர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களாக இருப்பதும் அவசியம்.

இதற்கிடையில், மலேசியா சபா பல்கலைக்கழகத்தின் (UMS) வணிகம், பொருளியல் மற்றும் கணக்கியல் புலத்தின் மூத்த விரிவுரையாளரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ஜானிஸ் ங்கா, மகப்பேறு விடுப்பை 98 நாட்களாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், பெண்களைப் பணியமர்த்துவது தொடர்பாக முதலாளிகள் எடுக்கும் முடிவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையையும் வெளிப்படுத்தினார்.

மகப்பேறு விடுப்புக் காலம் நீட்டிக்கப்படுவது பெண்களின் நலனுக்கு ஆதரவான நடவடிக்கையாக இருந்தாலும், வேலைவாய்ப்பில் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.