ராஜா காலிட் அனைத்துலக விமான நிலையத்தில் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

10 அக்டோபர் 2026, 5:49 AM
ராஜா காலிட் அனைத்துலக விமான நிலையத்தில் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

இஸ்தான்புல், அக். 10 – சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ராஜா காலிட் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் மீது வியாழக்கிழமை இரு தனித்தனி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அந்நாட்டில் வசிப்பவர்களும் காயமடைந்துள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் தாக்குதல் விமான நிலையத்தின் வசதிகளைக் குறிவைத்தும், இரண்டாவது தாக்குதல் அந்நாட்டின் தேசிய விமானச் சேவை நிறுவனமான சவுதியா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானத்தைக் குறிவைத்தும் நடத்தப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களால் சில சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், விமான நிலையத்தின் செயல்பாடுகளும் விமானப் போக்குவரத்தும் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் விமான நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சவுதியா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது. உயிரிழந்தவர் கெப்டன் ஹமூத் அலி அல்-கல்தாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.