ஷா ஆலாம், அக். 9 – தொழிற்கல்வி (TVET) திட்டங்களை வலுப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
தொழிற்கல்வி திட்டங்களுக்கு 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 7.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் ஒதுக்கீட்டை இளைஞர்களின் நலன் கருதி மத்திய அரசு அதிகரித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான தொழிற்கல்வி நிதி ஒதுக்கீட்டின் மூலம் இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், சேவையை நிறைவு செய்யும் ராணுவத்தினருக்கு மறுபயிற்சி வழங்குதல் மற்றும் நாட்டின் தொழில்துறைகளில் உள்ள திறன்மிக்க பணியாளர் தேவையைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளது.







