தொழிற்கல்வி பாடத்திட்டங்களை மேம்படுத்த தொழிற்துறைகளுக்கு அழைப்பு

17 அக்டோபர் 2026, 10:36 AM
தொழிற்கல்வி பாடத்திட்டங்களை  மேம்படுத்த தொழிற்துறைகளுக்கு அழைப்பு
தொழிற்கல்வி பாடத்திட்டங்களை  மேம்படுத்த தொழிற்துறைகளுக்கு அழைப்பு
தொழிற்கல்வி பாடத்திட்டங்களை  மேம்படுத்த தொழிற்துறைகளுக்கு அழைப்பு

கோலாலம்பூர், அக் 17 - சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கான (TVET) பாடத்திட்டங்கள் மேம்படுத்தப் பட வேண்டும் என சிலாங்கூர் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அந்நோக்கத்திற்காக, மாநில அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையிலான தீவிர ஈடுபாடு அவசியமென சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் டெக்ஸ்பியர் உச்சநிலை மாநாட்டின் நிறைவு விழாவில், அமிருடின் ஷாரி இந்த அழைப்பை விடுத்தார்.

தொழில்துறையினருக்கும் பயிற்சி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, குறிப்பாக நடைமுறைப் பயிற்சிகள், நவீன உபகரணங்களின் பயன்பாடு மற்றும் பணிச்சூழலை நேரடியாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்குவதில் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்றைய இளைஞர்கள் வெறும் கல்வித் தகுதியை மட்டும் கொண்டிருக்காமல், நடைமுறைத் திறன்கள் மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இந்தச் செயல்பாட்டில் தொழில்துறைக்கும் பயிற்சி நிறுவனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் சிலாங்கூர் தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு மையம் (STDC) மிக முக்கியப் பங்காற்றுகிறது.

சிலாங்கூர் மாநிலம் பெட்ரோலியம்,எரிவாயு போன்ற இயற்கை வளங்களைச் சார்ந்து இல்லை; எனவே,மனித வள மேம்பாடே மாநில அரசின் முதன்மை இலக்காக உள்ளது.

உயர் மதிப்புள்ள உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, அதற்குத் தகுந்த திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது அவசியமாகும் என்றும் மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.