இந்த ஞாயிறு பத்து தீகா குடியிருப்பாளர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை

8 அக்டோபர் 2026, 2:51 AM
இந்த ஞாயிறு பத்து தீகா குடியிருப்பாளர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை

ஷா ஆலாம், அக் 8 - பத்து தீகா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி குடியிருப்பாளர்கள் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) இலவச சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடையலாம்.

இந்த 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring) திட்டம் , செக்சன் 17-இல் உள்ள மஸ்ஜித் ரியாதுஸ்-சொலிஹினில் (Masjid Riadus-Solihin) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் என பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல்-ரஷித் ஹாரோன் கூறினார்.

உடல் பரிசோதனைகள், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள், கண், பல் மற்றும் காது பரிசோதனைகள், அத்துடன் பிசியோதெரபி (physiotherapy) மதிப்பீடுகள் உள்ளிட்ட அதிகமான சுகாதார பரிசோதனைகள் இதில் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

குடியிருப்பாளர்கள் SeLangkah செயலி (app) மூலம் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

தொற்றா நோய்களுக்கான (non-communicable diseases) பரிசோதனைகளில் இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்களுக்கான சோதனைகள் அடங்கும்.

புற்றுநோய் பரிசோதனைகள் பெருங்குடல், புரோஸ்டேட், கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களை உள்ளடக்கும்.

அதே நேரத்தில் கண் பரிசோதனைகளில், பார்வை குறைபாடுகள், குளுக்கோமா (glaucoma) மற்றும் விழித்திரை நிலைகளுக்கான சோதனைகள் இருக்கும்.

கேள்விகள் உள்ளவர்கள் 1-800-22-6600 என்ற எண்களில் செல்கேர் (Selcare) அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Selangor Free Health Screening Poster

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.