சேவையைத் தொடர MyEG முதலில் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்: அந்தோனி லோக்

7 அக்டோபர் 2026, 12:37 PM
சேவையைத் தொடர MyEG முதலில் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர், அக் 7: மைஈஜி நிறுவனம் (MyEG) தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் பரிசீலிப்பதற்கு முன், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

நிலுவைத் தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்பதில் போக்குவரத்து அமைச்சு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

"நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதில் உறுதியாக இருக்கிறோம். அந்தப் பணத்தைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறோம்."

இங்குள்ள ரயில்வே சொத்துக் கழக (RAC) கோபுரத்தில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரசாங்கத்தின் பகுதி நிதி உதவியைப் பெறும் பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டணக் கொடுப்பனவு அறிவிப்புக் கடிதம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ எம். ஜனசந்திரனும் கலந்து கொண்டார்.

கடந்த அக்டோபர் 5- ஆம் தேதி, சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) வசூல் முகவர்களான MyEG மற்றும் Zetrix AI Bhd ஆகிய நிறுவனங்கள், மே 19 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் வசூலிக்கப்பட்ட RM314 மில்லியன் வருவாயை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தவறியதால், அவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக லோக் தெரிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் முதல் அதிகாரிகளால் பல தொடர் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 35 நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், இரு நிறுவனங்களும் அந்த நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லோக் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.