பட்ஜெட் 2027: வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் தாக்கல் செய்வார்

6 அக்டோபர் 2026, 6:53 AM
பட்ஜெட் 2027: வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் தாக்கல் செய்வார்

கோலாலம்பூர், அக். 6 — 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

இதனை மக்களவை துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் நோர் தெரிவித்தார்.

ஒவ்வோரு ஆண்டும் வரவு செலவுத் திட்டம் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்த நிலையில், இம்முறை அதன் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இந்நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு கடிதம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரம்லி தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மடாணி அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் ஐந்தாவது தேசிய வரவு செலவுத் திட்டமாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.