அரிசி, மீன் உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களின் கையிருப்பு நிலையாக உள்ளது

6 அக்டோபர் 2026, 4:25 AM
அரிசி, மீன் உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களின் கையிருப்பு நிலையாக உள்ளது

ஷா ஆலாம், அக். 6 — மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், நாட்டின் அடிப்படை உணவுத் தேவைகளான குறிப்பாக அரிசி மற்றும் மீனின் விநியோகம் நிலையாக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் அரிசியின் மொத்த கையிருப்பு 11 லட்சத்து 93 ஆயிரத்து 478 மெட்ரிக் டன்னாகப் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த கையிருப்பு நாட்டின் உள்நாட்டுத் தேவையை சுமார் ஆறு மாதங்களுக்கு ஈடுசெய்யும் அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, நாட்டில் சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் மீன் கையிருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கையிருப்பு உள்நாட்டு தேவையை சுமார் 240 நாட்களுக்கு ஈடுசெய்யும்.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் விவசாயத்திற்கான உற்பத்திச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முகமட் சாபு குறிப்பிட்டார்.

இதனிடையே, நாட்டின் உணவு விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வது, உணவுப் பொருட்களின் விலையை நிலையாக வைத்திருப்பது, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது மற்றும் பொதுமக்களுக்கு ஆரோக்கியமானதும் சத்தானதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களுடன் தேசிய உணவு உத்தரவாதச் சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.