வேலை இழந்த பெர்கேசோ பங்களிப்பாளர்களுக்கான புதிய நலன்கள் இன்று முதல் அமல்

1 அக்டோபர் 2026, 8:29 AM
வேலை இழந்த பெர்கேசோ பங்களிப்பாளர்களுக்கான புதிய நலன்கள் இன்று முதல் அமல்

கோலாலம்பூர், அக். 1: வேலை இழந்த பெர்கேசோ பங்களிப்பாளர்கள், வேலைவாய்ப்பு காப்புறுதி மற்றும் வேலைவாய்ப்பு சேவைகள் சட்டம் 2017 (சட்டம் 800) திருத்தத்தின் கீழ் புதிய விகிதங்களின்படி பல்வேறு நலன்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதனை சமூகப் பாதுகாப்பு அமைப்பு (PERKESO) தெரிவித்துள்ளது.

சட்டம் 800இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதாக பெர்கேசோ தெரிவித்தது. அதில் மூன்று முக்கிய நலன் மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

முதலில் ஆரம்பகால மறுவேலை ஊக்கத்தொகையான EBSA-வின் விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு வேலை தேடும் கொடுப்பனவான EMP-யின் மீதமுள்ள தொகையில் 25 விழுக்காடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது 50 விழுக்காடு வழங்கப்படும்.

அதேவேளை, பயிற்சிக் கட்டணத்திற்கான அதிகபட்ச வரம்பு RM4,000இல் இருந்து RM7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பயிற்சிக் கொடுப்பனவும் நாளொன்றுக்கு RM30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வேலை இழந்த பின்னர் வேலைவாய்ப்பு காப்புறுதித் திட்டத்தின் (SIP) நலன்களைப் பெற்று, தங்களது வசிப்பிடத்திலிருந்து 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் புதிய வேலைவாய்ப்பைப் பெறும் பங்களிப்பாளர்களுக்காகப் புதிய உதவித்தொகையான EBM அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த EBM நலனின் கீழ் தகுதியுடையவர்களுக்கு ஒருமுறை RM1,000 வழங்கப்படும் என்று பெர்கேசோ தெரிவித்துள்ளது.

வேலை இழக்கும் பங்களிப்பாளர்கள், இந்த நலன்களுக்கான விண்ணப்பத்தை LINDUNG Kerjaya இணையத்தளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் அல்லது தங்கள் அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகக் கவுன்டர்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் புதிய மேம்பாடுகளின் வழி ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக RM3,300 மதிப்பிலான நலன்கள் கிடைக்கும். இதன் மூலம் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், MYFutureJobs மூலம் வேலைப் பொருத்த சேவைகள், தொழில் ஆலோசனை, மறுபயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் வேலைக்காக இடம்பெயர்வதற்கான ஆதரவு ஆகியவை ஒருங்கிணைந்த சேவையாக வழங்கப்படுவதன் மூலம், மக்களின் சமூகப் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என்றும் அந்த அமைப்பு கூறியது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட LINDUNG 24 Jam திட்டத்துடனும் இந்த நடவடிக்கைகள் இணைந்து செயல்படுவதாக அது குறிப்பிட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.