ரொஹிங்கிய அகதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

29 செப்டெம்பர் 2026, 3:29 AM
ரொஹிங்கிய அகதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்
ரொஹிங்கிய அகதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

ஷா ஆலாம், செப் 29 - மலேசியா சுமார் 1,500 ரொஹிங்கியாக்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தன்னார்வ முறையில் ரொஹிங்கிய அகதிகளைத் திருப்பி அனுப்பும் முதல் கட்டத்தின் கீழ் அவர்கள் அனுப்பப்படுகின்றனர் என AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியின் படி, குடிநுழைவுத் துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5,000 ரொஹிங்கியாக்களில் அந்த 1,500 பேர் அடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செய்தி நிறுவனம் மேற்கொண்ட கண்காணிப்பில், பேராக்கில் உள்ள லுமுட் ராணுவ கடற்படைத் தளத்திற்கு அருகில் உள்ள மஞ்சுங் நகராண்மைக் கழக அரங்கிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பல பேருந்துகள் வந்து நிற்பதைக் காண முடிந்தது.

ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

கப்பல் மூலம் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்ட ரொஹிங்கியாக்களின் ஆவணச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகள் விபரங்களை வெளியிடாததால், தற்போதைக்கு திருப்பி அனுப்பப்படும் ரொஹிங்கியாக்களின் எண்ணிக்கை தெரிய வரவில்லை.

நாட்டில் அடைக்கலம் கோரியிருக்கும் 1 லட்சத்து 90 ஆயிரம் மியன்மார் அகதிகளில் மூன்றில் இரு பகுதியினர் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லீம் சமூகத்தினர் ஆவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.