MBI அறக்கட்டளை : தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி கூரையைச் சீரமைக்க RM20,000 நன்கொடை

28 செப்டெம்பர் 2026, 9:48 AM
MBI  அறக்கட்டளை : தெலுக் டத்தோ  தமிழ்ப் பள்ளி கூரையைச் சீரமைக்க RM20,000 நன்கொடை

பந்திங், செப் 28 - புயல் காற்றினால் சேதமடைந்த பந்திங், தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளிக்கூட கூரையின் பழுதுபார்ப்பு பணிகளுக்காக மந்திரி பெசார் அறக்கட்டளை 20,000 ரிங்கிட் நன்கொடையை வழங்கியது.

கடந்த ஏப்ரல் 30 -ஆம் தேதி, புயல் காற்றினால் அப்பள்ளிக்கூடத்தின் கூரை சேதமடைந்தது.

உடனடியாக , அந்த கூரையை சரிசெய்வதற்காக, அப்போதே அந்த உதவி வழங்கப்பட்டதாக, மந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அஹ்மாட் அஸ்ரி சய்னால் நோர் தெரிவித்தார்.

மந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அஹ்மாட் அஸ்ரி சய்னால் நோர் : மீடியா சிலாங்கூர்

கூரையின் சீரமைப்புப் பணிகளும் முடிவடைந்து, தற்போது மாணவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்கின்றனர் என்றாரவர்.

அந்த உதவி வழங்கப்பட்டு விட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யும் விதமாக இன்று அதற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே, குவாலா லங்காட் மாவட்ட கல்வி அலுவலகம் ,அப்பள்ளிக்கூடத்தின் சீரமைப்பு பணிகளுக்கு ஏற்கனவே 1 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்கியிருப்பதாகவும் அஹ்மாட் அஸ்ரி குறிப்பிட்டார்.

மேலும், அப்பள்ளிக்கூடத்திற்கு பிரதமர் துறையின் செயலாக்க ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ், ஒதுக்கீடு பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, உதவிக்கான விண்ணப்பத்தைச் செய்து இரு வாரங்களில், மெந்திரி பெசார் அறக்கட்டளையிடமிருந்து நன்கொடை , பெற்றோர் ஆசிரியர் சங்க வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டதாக, குவாலா லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர். ஹரிதாஸ் தெரிவித்தார்.

குவாலா லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர். ஹரிதாஸ் : மீடியா சிலாங்கூர்

இவ்வேளையில், உதவிய அனைத்து தரப்புகளுக்கும் தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர். கணேஷ் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

சம்பவத்தன்று, கன மழையுடன் புயல் காற்று வீசியபோது, ஆசிரியர்களும் மாணவர்களும் புறநடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர். கணேஷ் : மீடியா சிலாங்கூர்

அச்சம்பவத்தில் கூரை சேதமடைந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.