ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷில் தங்கம் வென்றார் இங் யேன் யோ

27 செப்டெம்பர் 2026, 9:35 AM
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷில் தங்கம் வென்றார் இங் யேன் யோ

நகோயா, செப். 27 – ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் மலேசியாவின் நட்சத்திர வீரர் இங் யேன் யோ தங்கப் பதக்கம் வென்றார்.

அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் அபய் சிங்கை 11-9, 11-5, 11-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 28 வயதான இங் யேன் யோ வெற்றியைக் கைப்பற்றினார்.

2022ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இம்முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தனது ஆரம்பத் தகுதி வாய்ப்பையும் அவர் உறுதி செய்துள்ளார்.

அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா இதுவரை வென்றுள்ள ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.