செமினியில் புயலால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு RM12,000 நிதியுதவி

27 செப்டெம்பர் 2026, 10:00 AM
செமினியில் புயலால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு RM12,000 நிதியுதவி

செமினி, செப். 27 – கடந்த ஜூலை 18ஆம் தேதி கம்போங் பத்து 3 பகுதியில் ஏற்பட்ட புயலில் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை RM12,000 நிதியுதவியை வழங்கியது.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தொகையில் இந்த உதவி வழங்கப்பட்டதாக எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஸைனல் நோர் தெரிவித்தார்.

இந்த நிதியுதவி, சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையின அடையாளமாக வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

புயலால் ஏற்பட்ட சேதங்களின் தாக்கத்தை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவி ஓரளவு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.