பட்ஜெட் 2027 : நியாயமான ஊதியத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும் – அன்வார்

26 செப்டெம்பர் 2026, 11:00 AM
பட்ஜெட் 2027  : நியாயமான ஊதியத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும் – அன்வார்

ஷா ஆலாம், செப்.26 – பட்டதாரிகள் தங்களது கல்வித் தகுதிகளுக்கு ஏற்ற வேலைகளைப் பெறுவதுடன், அதற்கேற்ப ஊதியமும் வழங்கப்படுவதை உறுதி செய்ய 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முயற்சிகள் அறிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2027 பட்ஜெட்டுக்கான இறுதிக்கட்டத் தயாரிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பட்டதாரிகளின் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த முயற்சிகள் வகுக்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“உற்பத்தித்திறன் மற்றும் ஊதிய உயர்வு தொடர்பாக நான் முன்னதாகவே ஆய்வு மேற்கொண்டுள்ளேன். உதாரணமாக, தென் கொரியாவைப் பார்க்கலாம். அங்கு உற்பத்தித்திறன் அதிகமாக இருப்பதுடன், அதற்கேற்ப ஊதியமும் அதிகரித்துள்ளது.

“மலேசியாவில் உற்பத்தித்திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் ஊதியம் மிகக் குறைந்த அளவிலேயே உயர்ந்துள்ளது. எனவே, அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.